சலச வாவியில் செங்கயல் பாயும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
Answers
Answered by
57
சலச வாவியில் செங்கயல் பாயும்
இடம்
- பெரியவன் கவிராயர் எழுதிய திருமலை முருகன் பள்ளு என்ற பாடலில் வடகரை நாட்டின் சிறப்பினை கூறும் இடத்தில் சலச வாவியில் செங்கயல் பாயும் என்ற தொடர் இடம் பெற்று உள்ளது.
பொருள்
- தாமரைக் குளத்தில் மீன்கள் பாய்ந்து விளையாடுகின்றன.
விளக்கம்
- வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் ரீங்காரமிடும்.
- வண்டின் இசையினை கேட்ட மீனைப் பிடித்து உண்ண வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டும்.
- தாமரைக் குளத்தில் மீன்கள் பாய்ந்து விளையாடும்.
- முத்துக்களை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
- பெண் பெய் என்றதும் மழை பெய்யும்.
- முனிவர்கள் முக்காலம் அறிந்தவர்களாக திகழ்ந்தனர்.
- இத்தகைய வடகரை நாட்டில் திருமலை சேவகன் வீற்றிருக்கிறார்.
Answered by
6
Answer:
this is the answer for the question
Attachments:
Similar questions