சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்ற தலைப்பில் மேடைப்பேச்சிற்கான உரையை உருவாக்குக.
Answers
Answered by
8
Pls write in English I cannot understand
Answered by
9
சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே
- பெரியோர்களே சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.
- உழவு உலகிற்கு அச்சாணி என வள்ளுவர் போற்றும் அளவிற்கு உயர்ந்ததாக உள்ள வேளாண்மை ஆகும்.
- நாம் பல்வேறு தொழில்களை செய்தாலும், நாம் வேலை செய்வதன் அடிப்படையான உணவினை நமக்கு அளிக்கும் தொழிலாக விவசாயம் உள்ளது.
- ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலின் ஆசிரியரான மசானபுஃபிகோகா உழப்படாத நிலம், இரசாயன உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல்சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல் என்ற ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்கு தந்தார்.
- இன்றைய நவீன காலக்கட்டத்தில் அனைவரும் வேதிக்கலப்பு உள்ள பூச்சிக்கொல்லி மருந்துக்களேயே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
- இந்த பூச்சிக்கொல்லி மருந்துக்களில் உள்ள வேதிப்பொருட்களின் காரணமாக பூச்சிகள் அழிவதுடன் அந்த மருந்துக்கள் பயிர்களிலும் ஊடுருவிச் செல்வதால், அதனை உண்ணும் நமக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
- வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகியவற்றினை நன்றாக இடித்து, அதனை மாட்டுக் கோமியத்தில் ஊறவைத்து தெளிச்சாலே போதும்.
- எந்த பூச்சியும் பயிரினை தாக்காது.
- மேலும் இவை பயிருக்கும் வளம் சேர்க்கின்றன.
- மேலும் இவை மண்புழு அழிவதை தடுப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்தன்மையினை அதிகரிக்கிறது.
- இதன் மூலம் சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே என்று கூறி என் இருக்கையில் அமரும் முன் உங்களை என் இரு கை கூப்பி வணங்கி விடைபெறுகிறேன். நன்றி.
Similar questions