காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக
Answers
Answered by
5
காலம் என்பது இறந்த-காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். இந்த முக்காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக அமைந்துள்ளன.
hi mate me too tamil
follow me please...
Mark as brainliest please...
Answered by
9
காலம் காட்டும் இடைநிலை
- கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை என்பது ஒரு வினைப் பகுபதத்தில் பகுதி மற்றும் விகுதி ஆகிய இரண்டிற்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு என அழைக்கப்படுகிறது.
- காலம் காட்டும் இடைநிலை ஆனது இறந்த கால இடைநிலை, நிகழ் கால இடைநிலை மற்றும் எதிர் கால இடைநிலை என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இறந்த கால இடைநிலை
- த், ட், ற், ன் ஆகியன இறந்த கால இடைநிலைகள் ஆகும்.
- (எ.கா) செய்தான் (செய் + த் + ஆன்)
எதிர் கால இடைநிலை
- ப், வ் ஆகியன எதிர் கால இடைநிலை ஆகும்.
- (எ.கா) செய்வான் (செய் + வ் + ஆன்)
நிகழ் கால இடைநிலை
- கிறு, கின்று, ஆநின்று ஆகியன நிகழ் கால இடைநிலை ஆகும்.
- (எ.கா) செய்கின்றான் (செய் + கின்று + ஆன்)
Similar questions