பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
Answers
Answered by
1
ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா? அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை,
(1) பகுதி
(2) விகுதி
(3) இடைநிலை
(4) சாரியை
(5) சந்தி
(6) விகாரம்
follow me please...
Mark as brainliest please...
Answered by
3
பகுபத உறுப்புகள்
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகியன பகுபத உறுப்புகள் ஆகும்.
சந்தி
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றும் உறுப்பு சந்தி என அழைக்கப்படுகிறது.
- சந்தி என்பதற்கு புணர்ச்சி என்ற பெயரும் உண்டு.
- பகுதி மற்றும் இடைநிலை ஆகிய இரண்டிற்கும் இடையில் சந்தி வரும்.
- பெரும்பாலும் சந்தியாக த், ப், க் என்ற மூன்று எழுத்துக்களுள் ஒன்று வரும்.
சாரியை
- சாரியை என்பது பகுதியுடன் இடைநிலை அல்லது இடைநிலையுடன் விகுதி பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு என அழைக்கப்படுகிறது.
- பெரும்பாலும் இடைநிலை மற்றும் விகுதி ஆகிய இரண்டிற்கும் இடையில் சாரியை வரும்.
- பெரும்பாலும் அன் என்ற வார்த்தை சாரியையாக வரும்.
Similar questions