விகுதிகள் எவற்றை உணர்த்தும்?
Answers
Answered by
3
suffixes are words that come after a verb..
Answered by
12
விகுதிகள் உணர்த்துபவை
பகுபத உறுப்புகள்
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகியன பகுபத உறுப்புகள் ஆகும்.
விகுதிகள்
- விகுதி ஆனது ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை (அஃறிணை, உயர் திணை), பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின் பால், ஒன்றன் பால்) எண் (ஒருமை, பன்மை), இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை) முதலியவற்றினை வெளிப்படுத்தும் உறுப்பு என அழைக்கப்படுகிறது.
- விகுதி ஆனது வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் முதலிய பல இலக்கண பொருண்மைகளை உணர்த்தவும் பயன்படுகிறது.
(எ.கா)
- கொடுத்தான் (கொடு + த் + த் + ஆன்) என்ற சொல்லில் உள்ள ஆன் என்பது விகுதி ஆகும்.
Similar questions