"காவடிச் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் யார் அ) பாரதிதாசன் ஆ) அண்ணாமலையார் இ) முருகன் ஈ) பாரதியார் "
Answers
அண்ணாமலையார்
- அருணகிரிநாதரின் திருப்புகழ்த் தாக்கத்தினால் சென்னிகுளம் அண்ணாமலையார் அவர்களால் எழுதப்பட்ட சிறந்த சந்த இலக்கியம் காவடிச் சிந்து ஆகும்.
- காவடிச் சிந்தில் இடம்பெற்றுள்ள பாடலின் மெட்டுகள் அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டன.
- அண்ணாமலையார், தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதன் காரணமாக காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- அண்ணாமலையார் காவடிச் சிந்து தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன் கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- அண்ணாமலையார் தன் 18 ஆவது வயதிலேயே ஊற்றுமலைக்கு சென்று அங்கு இருந்த இருதயாலய மருதப்பத் தேவர் என்ற குறுநில தலைவரின் அரசவைப் புலவராக திகழ்ந்தார்.
Answer:
அண்ணாமலையார்
அருணகிரிநாதரின் திருப்புகழ்த் தாக்கத்தினால் சென்னிகுளம் அண்ணாமலையார் அவர்களால் எழுதப்பட்ட சிறந்த சந்த இலக்கியம் காவடிச் சிந்து ஆகும்.
காவடிச் சிந்தில் இடம்பெற்றுள்ள பாடலின் மெட்டுகள் அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டன.
அண்ணாமலையார், தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதன் காரணமாக காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அண்ணாமலையார் காவடிச் சிந்து தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன் கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
அண்ணாமலையார் தன் 18 ஆவது வயதிலேயே ஊற்றுமலைக்கு சென்று அங்கு இருந்த இருதயாலய மருதப்பத் தேவர் என்ற குறுநில தலைவரின் அரசவைப் புலவராக திகழ்ந்தார்.