காவடிச்சிந்து என்பது யாது?
Answers
Answer:
காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு.
சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. எடுப்பு 1, தொடுப்பு 1, உறுப்பு 3 என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘சிந்து’ பாடல். (அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும்.)
காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து என்னும் சிற்றிலக்கியத்தில் பலராலும் போற்றப்படும் நூலாகும்.
இது காவடி ஆட்டத்திற்குப் பாடப்படும் இசைப் பாவகையாகும். தமிழ் நாட்டிலே பண்டைக்காலம் தொடக்கம் பேணப்பட்டு வரும் ஒரு நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச் சிந்து எனலாம். முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகக் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
mark my answer Brainiest answer
follow me pls
காவடிச் சிந்து
- காவடிச் சிந்து என்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கில் உள்ள இசை மரபு என அழைக்கப்படுகிறது.
- குன்றுகள் தோறும் எழுந்தருளியிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது இன்றளவும் வழக்கில் உள்ளது.
- காவடி எடுத்துச் செல்வோர், காவடியை சுமையாக கருதாமல் முருகனை புகழ்ந்து பாடல் பாடியவாறே செல்வதற்காக பல வழிநடைப் பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளன.
- அத்தகைய வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற பாவடிவம் உருவானது.
- அண்ணாமலையார், தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதன் காரணமாக காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- காவடிச் சிந்தில் இடம்பெற்றுள்ள பாடலின் மெட்டுகள் அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டன.