India Languages, asked by anjalin, 7 months ago

ந‌ல்ல செய‌ல்களை ‌விரைந்து செ‌ய்ய‌‌ச் சொ‌ல்வத‌ன் மூல‌ம் ‌நிலையாமை ப‌ற்‌றி ‌திரு‌க்குற‌ள் யாது கூறு‌கிறது

Answers

Answered by ashauthiras
0

Answer:

நிலையாமை

நிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும்

சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம் போல் தோன்றுகின்றது. நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன. இரவும் பகலும்போல இன்ப துன்பங்கள் வந்து போகின்றன. தோன்றுவனவெல்லாம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. காலஓட்டத்தில் குழந்தை, இளைஞன், காதலன், தந்தை, தாத்தா ஆகி கடைசியாக நாச்செத்து, விக்கல் எழ, உடலைப் போட்டுவிட்டு, உயிர் சொல்லாமல் பறந்து எங்கோ மறைந்துவிடுகிறது.

உயிர்கள் ஏன் பிறப்பெடுக்கின்றன, சாவு உண்டானபின் உயிர்க்கு என்ன ஆகிறது என்பனபற்றி மனிதன் காலம் காலமாக ஆய்ந்து வருகிறான். ஆனால் விடை இன்னும் காணமுடியவில்லை. இனிமேலும் காணமுடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறையாகவே எக்காலத்தும் இருக்கும். உயிர்கள் பிறப்பிறப்பு உண்டானாலும் உயிரினத் தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். பொருள்கள் தோன்றி மறையும் தன்மையுடையதெனினும் இயற்கை எனும் ஒன்று நிலையாகவுளது. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் தோன்றுவதும் காற்று வீசுவது மழை பொழிதலும் மாறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடவுள் படைக்கும் உயிர்களும் மாந்தர் உண்டாக்கும் உடைமைகளும் நிலையற்றன என இவ்வதிகாரப்பாடல்கள் சொல்கின்றன. அவை நிலையற்றவை என்பதால் உயிர்கள் இயங்காமலும் இருக்க முடியாது பொருள்களைச் செய்யாமலும் இருக்கமுடியாது. நிலையாமை உணர்வை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படுவது நன்மை பயக்கும் என்பதை வலியுறுத்துவதே இவ்வதிகாரத்தின் நோக்கம்.

அன்றறிவாம் என்னாது அறம் செய்க...... (குறள் 36: பொருள்: பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க) என முன்பு சொல்லப்பட்டது. நிலையாமை அதிகாரத்தின் அடிக்கருத்தாக அறம் விரைந்து இயற்றப்படவேண்டும் என்பதும் அமையும். நிலையாமையைப் பற்றிய அறிவு ஒருவனுக்கு இருந்தால் அவனை ஈகைக்குணம் கொண்டவனாக மாற்றுதலும் அறவழிப் படுத்துதலும் எளிதாகும், இன்பம் மட்டுமே விழையும் மாந்தர் இருந்தான், இறந்தான் என்ற நிலையிலேயே இயங்குவர்.

நிலையாமையைப் பற்றித் தெரிந்திருந்தவனுக்கு சாவு பயம் இருக்காது. பிறந்தது இறக்கும், சாவு இயல்பானது; எளிதானது; அஞ்சத்தக்கதன்று என்று அதிகாரப்பாடல்கள் வழி எடுத்துரைத்து சாவு பயத்தை நீக்குகிறார் வள்ளுவர்.

நிலையாமையை நிலைபேறாக உடையது இவ்வுலகம். ஆனால் தம் உயிர், உடம்பு, இடம், பொருள் ஏவல் எல்லாம் நிலைத்தவை என்ற அறியாமையினாலே தீச்செயல் இயற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்நாளை அறுத்து விழ்த்தும் வாள் ஆகும் என்பதும் செல்வம், கூத்து மேடைக் கூட்டம் போலக் கூடிவந்தாலும், ஒன்று சேர கலைந்துவிடும் என்பதும் உணரப்பட வேண்டும் என்பதைச் சிறந்த உவமையணிகளால் விளக்கப்படுகின்றன.

'ஓர் ஊருக்கு நடந்து செல்கின்றவன் செல்ல வேண்டிய வழியின் தன்மையை உள்ளவாறு அறிந்துகொண்டு பிறகு நடந்து செல்வானானால் கலக்கமும் தயக்கமும் கொள்ளாமல் அஞ்சாமல் நடப்பான்; வழியில் உள்ள இடர்களை முன்னே அறிந்திருப்பதால் இடர்வந்தபோது வருந்தவும் மாட்டான். நல்ல வழி என்று நம்பி நடந்தால் முள்ளும் கல்லும் கண்டபோது வருந்துவான்; முன்னமே கல்வழி என்றும் முள்வழி என்றும் அறிந்திருந்தால் அவற்றைக் கண்டபோது கவலைப்பட மாட்டான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே' என்று நிலையாமை அறிவின் தேவையை விளக்குவார் மு வரதராசன்.

Answered by steffiaspinno
1

ந‌ல்ல செய‌ல்களை ‌விரைந்து செ‌ய்ய‌‌ச் சொ‌ல்வத‌ன் மூல‌ம் ‌நிலையாமை ப‌ற்‌றி ‌திரு‌க்குற‌ள் கூறுவது

திரு‌க்கு‌ற‌ள்

  • உலக பொதுமறை என ‌அழை‌க்க‌ப்படு‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவ மாலை ஆகு‌ம்.  

‌நிலையாமை

  • ந‌ம் வா‌ழ்‌க்கை ‌நிலை‌யி‌ல்லாது எ‌ன்பதையு‌ம், அத‌னா‌ல் இரு‌க்கு‌ம் போதே ந‌ன்மை‌யினை செ‌ய்ய வே‌ண்டு‌ம் எனவு‌ம் ‌நிலையாமை எ‌ன்னு‌ம் அ‌திகார‌ம் கூறு‌கிறது.  

எடு‌த்து‌க்கா‌ட்டு  

  • நா‌ச்செ‌ற்று ‌வி‌க்கு‌ள்மே‌ல் வாராமு‌ன் ந‌ல்‌வினை  மே‌ற்செ‌ன்‌று செ‌ய்ய‌ப் படு‌ம். 

பொரு‌ள்

  • நா‌க்கு அடை‌த்து, ‌வி‌க்க‌ல் வ‌ந்து, உ‌யி‌ர்‌க்கு இறு‌தி வருவத‌ற்கு மு‌ன்பாகவே ந‌ல்ல செய‌ல்களை ‌விரை‌ந்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்.
Similar questions