சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்
Answers
Answered by
4
Answer:
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு" - திருக்குறள் (299)
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
Explanation:
Answered by
6
சொல் பொருள் பின்வரு நிலையணி
அணி விளக்கம்
- செய்யுளில் முன்பு வந்த ஒரு சொல், மீண்டும் மீண்டும் பலமுறை வந்து அதே பொருளை விளக்கினால், அது சொல் பொருள் பின்வரு நிலையணி என அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டு
- வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
பொருள்
- ஒரு செயலை செய்வதற்கு முன் செய்யக்கூடிய செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, பகைவனின் வலிமை மற்றும் துணையாளரின் வலிமை ஆகியவற்றினை சீர்தூக்கி ஆராய வேண்டும்.
விளக்கம்
- குறளில் வலி என்ற சொல் பலமுறை வந்து வலிமை என்ற ஒரே பொருளை விளக்குவதால் இந்த குறளில் சொல் பொருள் பின்வரு நிலையணி பயின்று வந்துள்ளது.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
History,
1 year ago