கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம் வழி நிறுவுக
Answers
Answered by
8
கொடையில் சிறந்து விளங்க ஒப்புரவறிதல் அதிகாரம் மூலம் வள்ளுவம் கூறும் வழிகள்
ஒப்புரவறிதல்
- ஒப்புரவு என்பதன் பொருள் பிறருக்கு உதவுவது ஆகும்.
- அதாவது உலக இயல்பினை அறிந்து கைம்மாறு கருதாமல் கண்ணோட்டத்துடன் பிறருக்கு உதவி வாழ்தலே ஒப்புரவறிதல் ஆகும்.
- ஒருவன் தன் விடாமுயற்சி, கடின உழைப்பின் காரணமாக பெற்ற பொருட்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவே ஆகும்.
- உயர்ந்தவர்கள் காட்டிய உலக நெறிமுறைகளுடன் ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவன் ஆவான்.
- உலக நெறிமுறைகளுடன் ஒத்து வாழாதவன் செத்துவர்களுள் ஒருவனாக கருதப்படுவான்.
- பெரும் தன்மை உடையவரிடம் உள்ள செல்வம் ஆனது தன் அனைத்து பாகங்களையும் மருந்தாக மாற்றி மக்களுக்கு உதவும் மரத்திற்கு ஒப்பானது ஆகும்.
Similar questions