அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும் இக்கூற்றை முப்பால் வழி விளக்குக.
Answers
Answer:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
மணக்குடவர் உரை:
மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
பரிமேலழகர் உரை:
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).
மு. வரதராசன் உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
மு. கருணாநிதி உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
Translation:
Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
Explanation:
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).
ஒருவரை வாழ்வினில் உயர்த்தும் அடக்கமுடைமை
அடக்கமுடைமை
- தன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் அடங்கி இருப்பதே அடக்கம் ஆகும்.
- சான்றோர்கள் கூறும் நல்வழிகளை கேட்டறிந்து அதன்படி நடந்து உயர்ந்தவனின் வளர்ச்சி ஆனது மலையின் மாண்பினைக் காட்டிலும் பெரியது ஆகும்.
- ஒருவன் எவற்றை அடக்கி காக்காவிட்டாலும், தன் கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐம்புலன்களில் நாவினை அடக்கி காக்க வேண்டும்.
- அவ்வாறு நாவைக் காக்காதவர் சொற்குற்றத்திற்கு ஆளாகி துன்பப்படுவர்.
- தீயினால் சுட்ட புண்ணாது உடலில் தழும்பினை ஏற்படுத்தினால் விரைவில் உள்ளே ஆறிவிடும்.
- ஆனால் நாவினால் சுட்ட புண் ஆனது உடலில் தழும்பினை ஏற்படுத்தாவிட்டாலும் உள்ளே வடுவாக மாறி ஆறாமல் இருக்கும்.
- எனவே ஒருவர் வாழ்வினில் உயர்வு பெற அடக்கமுடைமை சிறந்த வழியென முப்பால் கூறுகிறது.