கருவிழி, பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answers
Answered by
11
Explanation:
கருவிழி=கருவிழி+விழி
பாசிலை=பாச+இலை
சிறியன்=சிறி+அன்
பெருங்கல்=பெரும்+கல்
Answered by
41
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
கருவிழி
- கருவிழி - கருமை + விழி.
- ஈறுபோதல் (ஈற்றெழுத்துக் கெட்டுப் போதல்) என்ற விதியின்படி கருமை என்ற சொல்லுள்ள மை கெட்டு கரு + விழி - கருவிழி என புணர்ந்தது.
பாசிலை
- பாசிலை - பசுமை + இலை.
- ஈறுபோதல் என்ற விதியின்படி மை கெட்டு பசு + இலை எனவும், ஆதிநீடல் என்ற விதியின்படி பாசு + இலை எனவும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதியின்படி பாச் + இலை எனவும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி பாசிலை எனவும் புணரும்.
சிறியன்
- சிறியன் - சிறுமை + அன்.
- ஈறுபோதல் என்ற விதியின்படி மை கெட்டு சிறு + அன் எனவும், இடை உகரம் இய்யாதல் என்ற விதியின்படி சிறி + அன் எனவும், உயிர்வரின் இ ஈ ஐ வழி யவ்வும் என்ற விதியின்படி ய் சேர்ந்து சிறி +ய் + அன் எனவும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி சிறியன் எனவும் புணரும்.
பெருங்கல்
- பெருங்கல் - பெருமை + கல்.
- ஈறுபோதல் என்ற விதியின்படி மை கெட்டு பெரு + கல் எனவும், இனமிகல் என்ற விதியின்படி க இனமான ங் சேர்ந்து பெரு + ங் + கல் எனவும் பின் பெருங்கல் எனவும் புணரும்.
Similar questions