"புணர்ச்சிவிதி தந்து விளக்குக. புலனறிவு, வில்லொடிந்தது, வழியில்லை, திரைப்படம், ஞாயிற்றுச்செலவு "
Answers
Answered by
3
Explanation:
plzz sorry l can't understand this language sorry
Answered by
7
புலனறிவு
- புலனறிவு - புலன் + அறிவு.
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி (ன்+அ = ன) புலனறிவு என புணரும்.
வில்லொடிந்தது
- வில்லொடிந்தது - வில் + ஒடிந்தது.
- தனிக்குறில் முன் உயிர்வரின் ஒற்று இரட்டும் என் விதியின்படி வில் + ல் + ஒடிந்தது எனவும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி (ல்+ஒ = லொ) வில்லொடிந்தது எனவும் புணரும்.
வழியில்லை
- வழியில்லை - வழி + இல்லை.
- உயிர்வரின் இ ஈ ஐ வழி யவ்வும் என்ற விதியின்படி ய் சேர்ந்து வழி+ ய்+ இல்லை எனவும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி (ய்+இ = யி) வழியில்லை எனவும் புணரும்.
திரைப்படம்
- திரைப்படம் - திரை + படம்.
- இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதியின்படி திரை+ ப்+ படம் என்றாகி திரைப்படம் என புணரும்
ஞாயிற்றுச்செலவு
- ஞாயிற்றுச்செலவு - ஞாயிறு + செலவு.
- நெடிலொடு உயிர்த்தொடர் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே என்ற விதியின்படி ஞாயிற்று + செலவு எனவும், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதியின்படி ஞாயிற்று+ ச்+ செலவு எனமாறி ஞாயிற்றுச்செலவு என புணரும்.
Similar questions
Chemistry,
4 months ago
Science,
4 months ago
Math,
4 months ago
Accountancy,
8 months ago
Math,
8 months ago
Social Sciences,
11 months ago
History,
11 months ago