"விதி வேறுபாடறிந்து விளக்குக. தன்னொற்றிரட்டல் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். இனமிகல் - வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும். "
Answers
Answered by
3
Answer:
plzzz sorry what your questions
Answered by
5
தன்னொற்றிரட்டல்
- பண்புப்பெயர் புணர்ச்சியில் ஈறுபோதல் விதியின்படி மை கெட்ட பிறகு, நிலைமொழியின் இறுதி உகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் இருந்தால் தன்னொற்றிரட்டல் விதி பயன்படும்.
(எ.கா)
- வெற்றிலை - வெறுமை + இலை.
- வெறு + இலை (ஈறுபோதல்)
- வெற்று + இலை (தன்னொற்றிரட்டல்)
- வெற்ற்+இலை (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்)
- வெற்றிலை (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
- தனிக்குறிலை கொண்ட மெய்யுடன் வருமொழியின் முதல் உயிரெழுத்து புணரும் போது தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதியின்படி ஒற்று இரட்டும்.
(எ.கா)
- கல்லெறிந்தான் - கல்+எறிந்தான்.
- கல்ல்+எறிந்தான் (தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்)
- கல்லெறிந்தான் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
இனமிகல்
- பண்புப்பெயர் புணர்ச்சியில் ஈறுபோதல் விதியின்படி மை கெட்ட பிறகு, நிலைமொழியின் இறுதி மகர மெய்யாக இல்லாமல், வருமொழியின் முதலில் கசதப வந்தால் இனமிகல் விதி பயன்படும்.
(எ.கா)
- கருங்கல் - கருமை+கல்.
- கரு+கல் (ஈறுபோதல்)
- கருங்+கல் (இனமிகல்)
வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்
- மகர மெய்யை ஈற்றாக கொண்ட நிலைமொழி, வல்லினத்தை முதலாக கொண்ட வருமொழியுடன் புணரும் போது மகர மெய் வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும் என்ற விதிப்படி வல்லினத்திற்கு இனமாக மெல்லினமாக புணரும்.
(எ.கா)
- காலங்கடந்தது - காலம் + கடந்தது
- காலங் + கடந்தது (வன்மைக்கு இனமாகத் திரிபவும் ஆகும்)
Similar questions