"கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க. அ)நிலைமொழியில் குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதியைப் பெறும். ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும் போது வகர உடம்படுமெய் பெறும். இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும் ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும். 1) அ, ஆ,இ சரி, ஈ தவறு 2) அ, இ, ஈ சரி, ஆ தவறு 3) அ, ஆ, சரி, இ, ஈ, தவறு 4) அ, ஆ, ஈ சரி, இ தவறு "
Answers
Answered by
0
Answer:
don't know
write in English
Answered by
0
அ, இ, ஈ சரி, ஆ தவறு
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
- நிலை மொழியில் குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் என்னும் விதியைப் பெறும்.
(எ.கா)
- காரிருள் - கருமை + இருள்.
- கரு + இருள் (ஈறுபோதல்)
- காரு + இருள் (ஆதிநீடல்)
- கார் + இருள் (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்)
- காரிருள் ( உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
இஈஐ வரும் போது யகர உடம்படுமெய்
- நிலை மொழியின் ஈற்றில் இஈஐ வரும் போது யகர உடம்படுமெய் பெறும்.
(எ.கா)
- வழியில்லை - வழி + இல்லை.
- வழி+ ய்+ இல்லை (உயிர்வரின் இ ஈ ஐ வழி யவ்வும்)
- வழியில்லை (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
ஈறுபோதல்
- பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ஈறுபோதல் என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்.
(எ.கா)
- கருவிழி - கருமை + விழி.
- கரு + விழி (ஈறுபோதல்)
தன்னொற்றிரட்டல்
- தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்.
(எ.கா)
- வெற்றிலை - வெறுமை + இலை.
- வெறு + இலை (ஈறுபோதல்)
- வெற்று + இலை (தன்னொற்றிரட்டல்).
- வெற்ற்+இலை (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்)
- வெற்றிலை (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
Similar questions