களிறுகவுள் அடுத்த எறகல் போல உவமையைப் பொருளோடு பொருத்துக?
Answers
Answer:
“உவமை என்னும் சொல் ‘உவ’ என்பதன் அடியாகத் தோன்றியது என்றும் அதற்கு உள்ளத்தில் உவகை எழ அமைவது என்றும் விளக்கம் தருவர். ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ (1229) என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்குப் பேராசிரியர் ‘உவமையும் பொருளும் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும்’ என உரை எழுதியுள்ளார். இவ்வுரைக் குறிப்பை நோக்கின், உவமை என்பதற்கு உவகை என்னும் பொருள் கூறியது பொருத்தம் எனலாம்” (சங்கத் தமிழ் வளம், ப.99) என மொழிவர் பேராசிரியர் இரா.சாரங்கபாணி. அவரது கூற்றுக்கு இணங்க, புறநானூற்றுப் புலவர்கள் கையாண்டுள்ள உவமைகள் படிப்பவர் உள்ளத்தில் உவகையைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளன; இன்னமும் கூர்மைப்படுத்திக் கூறுவது என்றால், ‘உவமையும் பொருளும் ஒத்தன’ என்று உலகத்தார் மகிழ்ச்சி கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றுள், இங்கே ஒரு சிலவற்றைக் குறித்துக் காணலாம்.
தீக்கடை கோல் போல் போன்றவன் அதியமான்
ஔவையார் பாடிய புறப்பாடல்கள் 33. அவற்றுள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை 22. இப் பாடல்களில் அதியமானின் கொடைப் பண்பையும் வீர உணர்வையும் திறம்படப் புலப்படுத்துவதற்காக ஔவையார் கையாண்டுள்ள 16 உவமைகளும் நனி சிறந்தவை. பதச்சோறாக ஓர் உவமையினை ஈண்டுக் காணலாம்.
அதியமான் நெடுமான் அஞ்சி வீட்டு இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோல் போன்றவன், அவன் தன் ஆற்றல் வெளியே தோன்றாது இருக்கவும் இருப்பான்; தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டிய பொழுதில், தீக்கடை கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்:
“ … … நெடுமான் அஞ்சி
இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே” (315)
‘அடக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் அடக்கமாக இருக்க வேண்டும்; வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் அதனை வெளிப்படுத்தவும் வேண்டும். இரண்டையும் தக்கவாறு, தக்க தருணத்தில் மேற்கொள்ளலே பெருமிதம்’ என்பதைப் புலப்படுத்தும் பாடல் இது. இதற்கு எடுத்துக்காட்டாக ஔவையார் தீக்கடை கோலைக் கையாண்டிருப்பது இரண்டிற்கும் நன்கு பொருந்திய உவமை ஆகும்.
“இது திருக்குறள் ஒன்றனுக்கு விளக்கம் தரக் கூடிய பாட்டு.
‘தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’ (236)
இதற்குப் பிறந்தால் புகழொடு பிறக்க வேண்டும் என்ற உரை பொருந்தாது. ஒரு செயலில் இறங்கினால் புகழுடன் தோன்ற வேண்டும்; இன்றேல் அதில் இறங்காதிருப்பதே நல்லது.
‘அஞ்சி, ஞெலிகோல் (தீக்கடை கோல்) போலத் தோன்றாதிருக்கவும் வல்லன்; போரென்று வெளிப்பட்டுத் தோன்ற வேண்டிய சமயம் வந்தால், அதில் வீரமுடன் தோன்றவும் வல்லன்’ என்ற பாடற் சொல்லும் கருத்தும் பொருந்தி வருதல் காணலாம்” (புறநானூற்றுக் குறும்படங்கள், பக்.59-60) என்னும் மூதறிஞர் தமிழண்ணலின் கருத்து ஈண்டு நினைவுகூரத் தக்கதாகும்.
‘செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்’
போருக்குத் தொடக்கமாகப் பகைவர் பசுக்களைக் கவர்ந்து வருதல் வெட்சித் திணை. அதன் துறைகளுள் ஒன்று உண்டாட்டு; வீரர்கள் மது உண்டு மனம் களிப்புறுவது. புறநானூற்றின் 257-ஆம் பாடல் வீரன் ஒருவன் தனது தலைவனை வியந்து கூறுவதாக அமைந்தது.
“செருப்பு இடைச் சிறுபரல் அன்னன்”
என இப் பாடலின் தொடக்க வரியில் இடம்பெற்றிருக்கும் உவமை அரிய ஒன்று. ‘செருப்பின் இடையே நுழைந்த சிறிய கல், அணிந்தோர்க்குத் துன்பத்தினைத் தருவது போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன்’ என்பது வீரனின் கூற்று. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பது போல், சிறியதாய், வருத்தம் மிகுதி செய்வதாய் அமைவது சிறுபரல். அரிய இவ்வுவமையைக் கையாண்ட புலவரின் பெயர் தெரிந்திலது.
‘கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு…’
வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் சென்ற நேரத்தில் அவன் எதிர்பாராமல் இறந்து விடுகிறான். ஆகவே, பெருஞ்-சித்திரனார் மிகுந்த ஏமாற்றமும் துயரமும் அடைகின்றார். அந் நிலையில் பாடிய பாடலில் அவர் தம்முடைய இரங்கத் தக்க அவல நிலைக்குக் கண் இல்லாத ஊமையன் ஒருவன் மழை பெய்து கொண்டிருக்கும் இரவுப் பொழுதில் அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு ஒப்பிடுகின்றார்:
களிறுகவுள் அடுத்த எறகல் போல
உவமை அணி
- தான் கூற எண்ணிய கருத்தினை நன்கு தெரிந்த கருத்தினை காட்டி விளக்குவது அல்லது தெரியாத பொருளை விளக்க தெரிந்த பொருளை சொல்லி விளக்குவது உவமை அணி ஆகும்.
- இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக வரும்.
எடுத்துக்காட்டு
- களிறுகவுள் அடுத்த எறகல் போல
இலக்கணம்
- உவமை - யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல்
- உவமேயம் - நலங்கிள்ளி தன் திறமையை அடக்கி வைத்து இருக்கும் திறமை
- உவம உருபு - போல
விளக்கம்
- யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல்லைப் போல் நலங்கிள்ளி தன் திறமையை அடக்கி வைத்து இருக்கும் திறமையினை பெற்று உள்ளார்.