சான்று தந்து விளக்குக. குற்றியலுகரப் புணர்ச்சி, முற்றியலுகரப் புணர்ச்சி
Answers
Answered by
14
Answer:
குற்றியலுகரச்சொற்கள் பிற சொற்களுடன் இணைவதை குற்றியலுகரப் புணர்ச்சி என்பர்.
குற்றியலுகரம் என்பது உகரம் ஏறிய வல்லின எழுத்துக்களான கு,சு,டு,து,பு,று சொல்லின் ஈற்றில் அமைந்து வரும் போது தன் ஓசையில் குறைந்து ஒலிப்பது குற்றிலுகரம் எனப்படும். குற்றியலுகரம் ஆறு வகைப்படும், குற்றியலுகர எழுத்துக்களின் எண்ணிக்கை - 6 (கு,சு,டு,து,பு,று)
Explanation:
Answered by
7
குற்றியலுகரப் புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதியிலுள்ள குற்றியலுகரம் உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதியின்படி மெய் விட்டு உகரம் மறையும்.
- பின்னர் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி வருமொழியின் முதலிலுள்ள உயிரெழுத்துடன் சேர்ந்து புணரும்.
எடுத்துக்காட்டு
- மாசற்றார் - மாசு + அற்றார்.
- மாச் + அற்றார் (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்)
- மாசற்றார் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
முற்றியலுகரப் புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதியிலுள்ள முற்றியலுகரம் ஆனது குற்றியலுகரத்தை போலவே மெய் விட்டு உகரம் மறையும்.
- பின்னர் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின்படி வருமொழியின் முதலிலுள்ள உயிரெழுத்துடன் சேர்ந்து புணரும்.
எடுத்துக்காட்டு
- வரவறிந்தான் - வரவு + அறிந்தான்
- வரவ் +அறிந்தான் (முற்றும் அற்று ஒரே வழி)
- வரவறிந்தான் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
Similar questions