அறிவியல் கருத்துக்களைத் தமிழ் மொழி வாயிலாக எளிதில் விளக்க இயலும் என்பதைத் தலைமைச் செயலகம் என்னும் பாடம் வழி நிறுவுக
Answers
Answered by
0
தலைமைச் செயலகம்
- சுஜாதா அவர்கள் மூளையினை பற்றி தலைமைச் செயலகம் என்ற உரைநடையில் கூறியுள்ளார். மூளையின் பசியானது நிமிடத்திற்கு 800 மில்லி இரத்தம் ஆகும்.
- தூங்கினாலும் விழித்திருந்தாலும் குளுக்கோஸ் குளுக்கோஸ் என அலறும் இராட்சத குழந்தை தான் மூளை என கூறினார்.
- மூளை ஆனது முதுகுத் தண்டிலிருந்து முளைத்து, மடிப்பு மடிப்பாக முட்டைக்கோஸ் இலைகள் போல மூளை வளர்க்கின்றது.
- இதை முன்மூளை, பின்மூளை, முகுளம் என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.
- கண் மற்றும் மூக்கு இவற்றின் முடிவுகள் முன்மூளையில் உள்ளது.
- நம் உடல் அசைவுகள் மற்றும் உணர்ச்சிகளின் வளர்ச்சி ஆகியவற்றினை பின்மூளையில் உள்ள சிறுமூளை கட்டுப்படுத்துகிறது.
- இலக்கண விதியின் அடிப்படையில் மொழி பேசுவது மனிதனுக்கு உண்டான தனிப்பட்ட திறமை ஆகும்.
- இதை சிம்பன்ஸி போன்ற குரங்குகளுக்கு கஷ்டப்பட்டு சொல்லிக் கொடுத்தும் இந்த திறமை அவற்றிற்கு வருவதில்லை.
- நோம் சோம்ஸ்கி என்ற அமெரிக்க உளவியல் மொழியியலாளர் நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்.
- இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக்கொள்ளும் திறமையும் பொதிந்து காணப்படுகிறது என்ற கருத்தை வெளியிட்டார்.
- தாமஸ் ஆல்வா எடிசன் உங்கள் உடலின் முக்கிய பணி மூளையைத் தாங்கி செல்வது என்று கூறினார்.
- பத்து இலட்சம் நியூரான்களை கொண்ட தேனீயின் மூளையானது இன்று உள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் வேகத்தினை விட ஆயிரம் மடங்கு அதிகம்.
- அப்படியென்றால் பத்தாயிரம் கோடி நியூரான்களை கொண்ட நம் மூளையின் வேகத்தினை எண்ணி பாருங்கள்.
- சுவரில்லாமல் சித்திரம் இல்லை என்ற பழமொழியினை கருத்தில் எடுத்த சுஜாதா சுவரான உடலைப் பாதுகாப்பது போல, மேல்மாடியான மூளையையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
- அறிவியல் கருத்துக்களை உவமை, எள்ளல் நடை, ஒப்பீட்டு முறை, பேச்சு மொழி என தமிழ் மொழி வாயிலாக எளிதில் விளக்க இயலும் என்பதை சுஜாதா நிரூபித்துள்ளார்.
Similar questions