அறிவியல் சிந்தனைகள் நிரம்பிய காப்பியம் நீலகேசி - இக்கருத்தினை நும் பாடப்பகுதி வாயிலாக ஆராய்க.
Answers
நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1]
இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.
⏩கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
⏩தரும உரை - 140 பாடல்கள்
⏩குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
⏩அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
⏩மொக்கல வாதம் - 193 பாடல்கள்
⏩புத்த வாதம் - 192 பாடல்கள்
⏩ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
⏩சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
⏩வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
⏩வேத வாதம் - 30 பாடல்கள்
⏩பூத வாதம் - 41 பாடல்கள்
அறிவியல் சிந்தனைகள் நிரம்பிய காப்பியம் நீலகேசி
தாவரத்திற்கு உயிர் உண்டு
- நீலகேசி புத்தத்துறவியான மொக்கலனிடம், நீங்கள் பழத்தோலிற்கு உயிர் இல்லாதது போல தாவரத்திற்கும் உயிர் இல்லை என்று கூறுகிறீர்கள்.
- தொட்டால் சிணுங்கி தாவரத்தினை தொட்டால் சுருங்கிவிடும்.
- தொடுவதை நிறுத்திய சில நேரங்களில் மீண்டும் பழைய நிலையினை அடையும்.
- எனவே தாவரத்திற்கு உயிர் உண்டு.
- இளவேனில் காலத்தில் மரங்கள் நன்கு வளர்கின்றன.
- மலர்கின்றன.
- நோய்வாய்ப்பட்டு பின்பு அதிலிருந்து மீள்கின்றன.
- எனவே அதற்கு உயிர் உண்டு நான் கூறுகிறேன்.
- ஆனால் நீங்கள் காந்தம் இரும்புத் துகளை ஈர்ப்பதால் அதற்கு உயிர் உண்டு என முரண்பாடான உவமை கூறுகிறீர்கள்.
- தாவரங்கள் பருவக் காலத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.
- எனவே தாவரத்திற்கு உயிர் உண்டு என நான் கூறுகிறேன்.
- ஆனால் பருவங்கள் மாறுவதால் அவற்றிற்கு உயிர் உண்டு என நீங்கள் கூறுவது தவறு என கூறினாள்.
ஒலி, ஒளி
- புத்தத்துறவியே நீங்கள் காதுகள் ஒலியினை கவரும் என்று கூறுகிறீர்கள்.
- ஆனால் உண்மையில் ஒலியினை காதுகளால் கவர இயலாது.
- ஒலி மற்றும் ஒளி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் தோன்றினாலும், அவை இரண்டையும் நாம் ஒரே நேரத்தில் உணர்வதில்லை.
- ஒலிதான் செவியினை வந்தடைகிறது.
- செவி ஒலியினை அடைவதில்லை.
- ஒலி உள்ளே தோன்றுவது கிடையாது.
- அது வெளியே இருந்து வந்து நம் காதுகளை அடைகிறது.
- காதுகள் ஒலியை ஈர்ப்பது இல்லை.
- ஒலிகள் காதுகளை அடைகின்றன என்று கூறினாள்.
- இவ்வாறு பல அறிவியல் செய்திகள் நீலகேசியில் இடம்பெற்று உள்ளது.