உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
Answers
Answered by
12
உவமையின் தோன்றுவதன் அடிப்படை
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணிதான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
தோன்றுதல்
- வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் - (தொல்காப்பியம் - 1222).
- வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் உவமை தோன்றியதாக தொல்காப்பியம் கூறுகிறது.
உதாரணம்
- வினை (தொழில்) - புலி போலப் பாய்ந்தான்.
- பயன் - மழை போலப் கொடுக்கும் கை.
- வடிவம் (மெய்) - துடி போலும் இடை
- உரு (நிறம்) - தளிர் போலும் மேனி
Similar questions