உவமைத்தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமையைக் கண்டறிக.
Answers
Answered by
0
WHT LANGUAGE IS THIS???
Answered by
1
உவமைத் தொடர்களால் அழைக்கப் பெறும் சங்கப் புலவர்கள்
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணிதான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
- சங்க இலக்கிய நூல்களை தொகுத்தவர்கள் அந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாத போது, அதில் உள்ள உவமையின் அடிப்படையிலேயே பெயரினை வைத்தனர்.
- அவ்வாறு உவமைத் தொடர்களால் அழைக்கப் பெறும் சங்கப் புலவர்களின் பெயர்கள் செம்புலப்பெயல்நீரார், தேய்புரிபழங்கயிற்றினார், அணிலாடு முன்றிலார் ஆகும்.
விளக்கம்
- செம்புலப்பெயர்நீர் - செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர்.
- தேய்புரிபழங்கயிறு - தேய்ந்து மெலிந்த பழைய கயிறு.
- அணிலாடுமுன்றில் - அணில் விளையாடும் வீட்டின் முற்றம்.
Similar questions