உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க.
Answers
Answered by
2
உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாடு
உள்ளுறை
- கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அக மனிதர்களின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமம் ஆகும்.
(எ.கா)
- ஈயல் புற்றத்து எனத் தொடங்கும் பாடல்.
விளக்கம்
- பசியிடன் அலைந்த கரடி ஈசல் புற்றில் கைவிட்டது.
- ஈசல் புற்றில் பதுங்கியிருந்த பாம்பு கரடியின் நகம் பட்டதால் வருந்தியது என்பது இதன் பொருள்.
- இதில் தலைவன் இரவில் காட்டைக் கடந்து வருவதை எண்ணி தலைவி வருந்துவதை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
- கரடி தலைவனும், பாம்பு தலைவிக்கும் குறியீடாக அமைந்துள்ளது.
இறைச்சி
- இறைச்சி என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத ஒரு குறிப்புப் பொருள் ஆகும்.
(எ.கா)
- நசை பெரிது எனத் தொடங்கும் பாடல்
விளக்கம்
- தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, தலைவன் செல்லும் வழியில் ஆண் யானை, தன் பெண் யானையின் பசியினைப் போக்க யா மரத்தின் பட்டையை உறித்து அதன் ஈரச்சுவையை அருந்தச் செய்யும் என்பது இதன் பொருள்.
- இதன் மூலம் கூறவருவது, ஆண் யானையின் அன்பினை பார்க்கும் தலைவன் உன்னை தேடி வருவான் என்பது ஆகும்.
Answered by
1
Answer
ப் ள்ளிக ளுபெண் கல்வியும் உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன
Similar questions