உவமை, உருவகம் - வேறுபடுத்துக
Answers
Answered by
17
உவமை மற்றும் உருவகம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- உவமைத் தொடரில் உவமை (ஒப்பாக காட்டப்படும் பொருள்) மற்றும் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) வெவ்வேறாக இருக்கும்.
- உவமைத் தொடரில் உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும்.
- (எ.கா) தாமரைப் போன்ற முகம்.
உருவகம்
- ஒப்பீட்டுச் செறிவு மற்றும் பொருள் அழுத்தம் ஆகியவற்றினை உடையதாக உருவகம் உள்ளது.
- உருவகத் தொடரில் உவமை (ஒப்பாக காட்டப்படும் பொருள்) மற்றும் உவமேயத்தினை (உவமிக்கப்படும் பொருள்) வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
- உருவகத் தொடரில் உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமையும்.
- (எ.கா) முகத்தாமரை.
Similar questions