தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
Answers
Answered by
7
Answer:
can you translate it into English and post the question
Answered by
9
தமிழ் இலக்கியங்களில் கல்வி
தொல்காப்பியம்
- தமிழில் தற்போது உள்ள மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வது ஓதற்பிரிவு என கூறப்பட்டு உள்ளது.
- தொல்காப்பியத்தில் எண்வகை மெய்ப்பாடு பற்றி கூறும் போது ஒருவருக்கு கல்வியின் பொருட்டு பெருமிதம் தோன்றும் என்று கூறப்பட்டு உள்ளது.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய இலக்கணம் தொல்காப்பியம் மற்றும் நன்னூலில் உள்ளன.
புறநானூறு
- தொண்டுகள் செய்தும், பொருள் கொடுத்தும் மாணவர்கள் ஆசிரியரிடம் கல்வி கற்றதைப் பற்றி புறநானூறு என்ற நூலில் உள்ள உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்ற வரிகள் கூறுகின்றன.
பிற இலக்கியங்கள்
- கல்வி அழகே அழகு - நாலடியார்
- இளமையில் கல் - ஆத்திசூடி
- துணையாய் வருவது தூயநற்கல்வி - திருமந்திரம்
Similar questions