சமணப் பள்ளிகளும் பெண் கல்வியும் - குறிப்பு வரைக
Answers
Answered by
29
சமணப் பள்ளி
- சமண சமயத்தின் தலையாய அறங்களாக கல்வி, மருந்து, உணவு மற்றும் அடைக்கலம் ஆகிய நான்கு கொடைகள் உள்ளன.
- சமண சமயத்தினை சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கி, அங்கே கல்வி மற்றும் சமயக் கருத்துக்களை மாணவர்களுக்குப் போதித்தனர்.
- பள்ளி என்ற சொல்லிற்கு படுக்கை என்று பொருள்.
- சமணத் துறவிகளின் படுக்கையின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதால் அந்த இடம் பள்ளிக்கூடம், கல்விக்கூடம் என அழைக்கப்பட்டது.
பெண் கல்வி
- பெண் சமண ஆசிரியர் ஒருவர் வந்தவாசி அருகேயுள்ள வேடல் என்ற ஊரில் உள்ள சமணப் பள்ளியில் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
- விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியினை பட்டினிக்குரத்தி என்ற சமணப் பெண் நிறுவினார்.
- பெண்களுக்கு என்று தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என அழைக்கப்பட்டன.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
Environmental Sciences,
9 months ago
Biology,
1 year ago