பெளத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க
Answers
Answered by
6
பெளத்த மற்றும் சமணக் கல்வி
- சமண சமயத்தினை சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கி, அங்கே கல்வி மற்றும் சமயக் கருத்துக்களை மாணவர்களுக்குப் போதித்தனர்.
- சமணத் துறவிகளின் படுக்கையின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதால் அந்த இடம் பள்ளிக்கூடம், கல்விக்கூடம் என அழைக்கப்பட்டது.
- வந்தவாசி அருகேயுள்ள வேடல் என்ற ஊரில் உள்ள சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார்.
மரபுவழிக் கல்வி முறைகள்
குருகுலக்கல்வி முறை
- மாணவர் ஆசிரியருடன் தங்கி, அவருக்கு உதவி செய்து கல்வியினை கற்றனர்.
- இந்த கல்விமுறை படிப்பு மட்டுமின்றி வாழ்வியலையும் கற்பித்தது.
திண்ணைப்பள்ளி கல்வி முறை
- தெற்றிப் பள்ளிகள் என அழைக்கப்பட்ட திண்ணைப்பள்ளிகளில் கற்பிக்கும் நேரம், பாடத்திட்டம் மற்றும் பயிற்றுவிக்கும் முறை என அனைத்தும் கணக்காயர் என அழைக்கப்பட்ட ஆசிரியர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது.
- தாமஸ் மன்றோ என்பவரின் ஆய்வில் ஐரோப்பிய கல்வி முறையினை விட திண்ணைப் பள்ளி கல்விமுறை உயர்ந்தாக கருதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உயர்நிலைக் கல்வி முறை
- உயர்நிலைக் கல்வி முறை ஆனது தனி நிலையில் புலவர்களிடத்துக் கற்கும் முறையினைக் குறிக்கிறது.
- திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் உ.வே. சா அவர்கள் உயர்நிலைக் கல்வி முறையில் கல்வி கற்றார்.
Answered by
0
பெளத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க
Similar questions
Geography,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Physics,
9 months ago
Political Science,
9 months ago
Chemistry,
1 year ago
India Languages,
1 year ago