பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?
Answers
Answered by
13
Explanation:
பாரதி பார் போற்றும் கவிஞர். நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு இதழியலாளர், தமிழ் இதழியலில் புதுமைகள் தந்த முன்னோடி என்பது முக்கியமான பதிவு.
தொடக்க காலத் தமிழ் இதழியலில் பல புதிய உத்திகளைத் திறம்படக் கையாண்டவர். அவற்றில் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, சூரியோதயம், தர்மம் ஆகிய இதழ்களிலும் பாலபாரதா, 'ஆர் யங் இந்தியா' என்னும் ஆங்கில இதழிலும் பாரதி பணியாற்றினார்.
l hope this will help you
Answered by
22
பாரதியின் இதழாளர் முகம்
- தேசியகவி என போற்றப்படும் பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமின்றி, சிறந்த பேச்சாளராக, பாடகராக, எழுத்தாளராக, இதழாளராக திகழ்ந்தார்.
- பாரதியார் தொடக்கத்தில் சுதேசிமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராக செயல்பட்டார்.
- அதன் பிறகு சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, பாலபாரதி, கர்மயோகி என பல இதழ்களுக்கு ஆசிரியராக திகழ்ந்தார்.
- ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட பல இன்னல்களுக்கும் இடையே இவர் இதழினை நடத்தினார்.
- தன் இதழ்கள் மூலம் நாடு மற்றும் பெண் விடுதலைக்காக பாடுபட்டார்.
- இதழில் முதன் முதலாக கருத்துப் படங்களை கேலிச் சித்திரமாக வரையும் கார்ட்டுனை அறிமுகம் செய்து வைத்தார்.
- ஆண்டு, திங்கள், நாள் என தூய தமிழ்ச் சொற்களை தன் இதழ்கள் மூலம் அறிமுகம் செய்தார்.
- தன் பெயரையும், தன் நண்பர்கள், சந்திக்கும் இடம் என அனைத்தையும் புனைப் பெயராகவே பயன்படுத்தினார்.
- இதழியலில் தேதி குறிப்பிடல், கருத்துப்படம் வெளியிடல், மகுடமிடல் முதலியனவற்றில் முன்னோடியாக பாரதியார் திகழ்ந்தார்.
Similar questions