ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answers
Answered by
7
ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு.
இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.
ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.
Answered by
7
ஆசிரியப்பாவின் வகைகள்
- ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா மற்றும் அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகைப்படும்.
நேரிசை ஆசிரியப்பா
- இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களையும், மற்ற அடிகள் நான்கு சீர்களை பெற்று வருவது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.
இணைக்குறள் ஆசிரியப்பா
- முதல் மற்றும் இறுதி அடிகள் நான்கு சீர்களையும், இடையடிகள் இணை இணையாய் இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும்.
நிலைமண்டில ஆசிரியப்பா
- எல்லா அடிகளும் நான்கு சீர்களை கொண்டதாக வருவது நிலை மண்டில ஆசிரியப்பா ஆகும்.
அடிமறி மண்டில ஆசிரியப்பா
- பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசை மற்றும் பொருள் மாறாமல் வருவது அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும்.
Similar questions