பொருந்தாததை தேர்க அ) ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆ) ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார் இ) ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஈ) ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத்திங்கள் தேவைப்பட்டன 1) அ, ஆ 2) ஆ, இ 3) அ, இ 4) ஆ, ஈ
Answers
Answered by
1
ஆ, ஈ
ஆனந்தரங்கர் நாட்குறிப்புகள்
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் தமிழில் பன்னிரண்டு தொகுதிகளாக வெளி வந்து உள்ளன.
- ஆனந்தரங்கர் தன் நாட்குறிப்புகளில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதி இருக்கிறார்.
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஆனது 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
- ஆனந்தரங்கர் தன் நாட்குறிப்பில் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலியன அடங்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.
- மேலும் இவரின் நாட்குறிப்பு ஆனது 18 ஆம் நூற்றாண்டில் இருந்து புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள நமக்கு கிடைத்த சிறந்த அரிய பெட்டகமாகவும் திகழ்கிறது.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன.
Similar questions