நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது அ) காய் முன் நேர் ஆ) காய் முன் நிரை இ) கனி முன் நிரை ஈ) மா முன் நேர்
Answers
Answered by
8
மா முன் நேர்
ஆசிரியப்பா
- அகவல் ஓசையினை உடையதாக ஆசிரியப்பா விளங்குவதால் இது அகவற்பா என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆசிரியப்பாவின் அனைத்து சீர்களும் நான்கு அடிகளை உடையதாக வரும்.
- ஆசிரியப்பாவில் இயற்சீர் அதிகமாகவும் மற்றச் சீர்கள் குறைவாகவும் வரும்.
தளை
- நேரொன்றாசிரியத் தளை மற்றும் நிரையொன்றாசிரியத் தளை என ஆசிரியப்பாவிற்கு உரிய தளை இரண்டு வகையாக உள்ளன.
- நேரொன்றாசிரியத் தளை என்பது மாமுன் நேர் ஒன்றி வருவது ஆகும்.
- (எ.கா) நல்லார் - நல் / லார் = நேர் +நேர் = தேமா.
- நிரையொன்றாசிரியத் தளை என்பது விளம்முன் நிரை ஒன்றி வருவது ஆகும்.
- (எ.கா) திருமுகம் - திரு / முகம் = நிரை + நிரை = கருவிளம்
Similar questions