ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர் - இப்பாடலடிகளில் ஒளிரக் காய்த்தது எது? பழுத்தது எது?
Answers
Answered by
4
ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்
சீறாப்புராணம்
- நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலான சீறாப்புராணம் ஆனது வள்ளல் சீதக்காதியின் வேண்டுக்கோளுக்கு ஏற்ப உமறுப்புலவர் அவர்களால் இயற்றப்பட்டது.
- இது விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஈஜிரத்துக் காண்டம் என மூன்று காண்டங்களையும், 92 படலங்களையும், 5027 விருத்தப் பாக்களையும் கொண்ட நூல் ஆகும்.
- மதீனம் புக்க படலத்தில் இடம்பெற்று உள்ள ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர் என்ற பாடல் அடிகளில் உள்ள ஒளிரக் காய்த்தது மதீனா நகரில் உறுதியான வலிமை நல்கும் வெற்றி மற்றும் அந்த வெற்றியை தரும் குறைவில்லா ஊக்கம் ஆகும்.
- மதீனா நகரில் தீன் என்ற செல்வம் பழுத்திருந்தது.
Answered by
2
Answer:
ஒளிரக் காய்த்தது:
மதீனா நகரில் தானம், ஒழுக்கம், தவம், ஈகை, மானம் முதலிய நற்பண்புகள் விளங்கிய நகரம்.
பழுத்தது:
தீன் என்னும் மார்க்கம் பழுத்து விளங்கக் கூடிய செம்மை பொருந்திய நகரம்.
Similar questions