வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.
Answers
Answered by
11
Explanation:
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
மு.வரதராசன் விளக்கம்:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
இருள்நீக்க ஏற்றப்படும் விளக்குகளோ அறியாமை நீக்க விளக்கப்படும் விளக்கங்களோ விளக்கு ஆகாது. உதரணமாக இருப்பவருக்கு பொய்யற்ற விளக்கே விளக்கு.
Answered by
7
வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக உள்ள திருக்குறள்
பொச்சாவாமை
- மகிழ்ச்சியின் காரணமாக தங்களின் கடமைகளை மறப்பவர்கள், மறதியினால் கெட்டவரை நினைத்துப் பார்க்க வேண்டும்.
- எப்போதும் எண்ணியதை எண்ணிக் கொண்டிருந்தால் எண்ணியதை அடைதல் எளிதே ஆகும்.
குறிப்பறிதல்
- முகத்தை பார்த்து மனதில் நினைப்பவரை கூறுபவரை ஏதாவது கூறி தனக்கு துணையாக்க வேண்டும்.
- கண்ணின் குறிப்புகளை உணர்பவரைப் பெற்றால் பகை மற்றும் நட்பை அவரது கண்ணே கூறிவிடும்.
படைமாட்சி
- வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு ஆகும்.
பகைத்திறம் தெளிதல்
- பண்பற்ற பகையை விளையாட்டாக கூட ஒருவர் விரும்பக் கூடாது.
- வில் உடைய வீரரின் பகையை பெற்றாலும், சொல்வன்மை உடைய அறிஞரின் பகையை பெறக் கூடாது.
- முள்மரத்தினை சிறியதாக இருக்கும் போதே களைந்து விட வேண்டும்.
- வளர்ந்து விட்ட பிறகு களைய எண்ணினால் வெட்டுபவரின் கையையே வருத்தும்.
மருந்து
- தான் முன்பு உண்ட உணவானது செரித்துவிட்டது என்பதை அறிந்த பிறகு உணவு உண்பவருக்கு மருந்து என ஒன்று தேவையில்லை.
- நோய், அது ஏற்பட காரணம், அதனை நீக்கும் வழி, நோயாளியின் வயது, நோயின் அளவு, மருத்துவத்தின் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
- மருத்துவம் ஆனது நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என நான்கு வகையினை உடையதாக உள்ளது.
இரவச்சம்
- பிறரிடம் கையேந்தும் நிலைக்கு ஒருவரை மாற்றியவர் அலைந்து விரைவில் கெடுவார்.
- பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்ற பாதுகாப்பில்லா படகானது ஈயாமை என்ற பாறை மோதினால் உடைந்துவிடும்.
Similar questions