கல்லும் கதை சொல்லும் - என்னும் தொடர் தஞ்சை பெரிய கோயிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக
Answers
Answered by
15
கல்லும் கதை சொல்லும்
தஞ்சை பெரிய கோயில்
- முதலாம் இராசராச சோழனால் கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில் 1003ல் தொடங்கப்பட்டு 216 அடி உயரம் உடைய கருங்கல் கோபுரம், கருவறை விமானம், 13 தளங்கள் உடைய தஞ்சை பெரிய கோவில் 1010ல் கட்டி முடிக்கப்பட்டன.
கல்வெட்டுகள்
- கல்வெட்டுகள் மூலம் பண்டைய வரலாறு, இசை, நடனம், நாடகம் போன்ற பல கலைகளை வளர்த்தது, பஞ்சத்தின் போது மக்களுக்கு உதவும் தானியக் கிடங்கு, மருத்துவமனையாக, படைவீரர்கள் தங்கும் இடமாக கோவில்கள் இருந்தது உள்ளிட்ட பல செய்திகள் அறியப்படுகிறது.
ஓவியங்கள்
- தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை ஆகிய பகுதியில் உள்ள சுவர்களில் தட்சிணாமூர்த்தி ஒவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியங்கள் பெரிய அளவில் வரையப்பட்டு இருந்தன.
- அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சார்ந்தவை ஆகும்.
பெண் அதிகாரிகள்
- கோவில்கள் கட்டும் பணியில் ஆண்கள் மட்டுமின்றி எருதந் குஞ்சர மல்லி மற்றும் சோமயன் அமிர்தவல்லி உள்ளிட்ட பெண் அதிகாரிகளும் ஈடுபட்டனர் என்ற தகவலும் கல்வெட்டுகளில் உள்ளது.
- இவ்வாறு கல்லும் கதை சொல்லும் என்ற தொடர் தஞ்சை பெரிய கோயிலுக்குப் பொருந்துகிறது.
Similar questions
Physics,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
English,
9 months ago
Business Studies,
1 year ago