ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க அ) காவலாளி ஆ) மேலாளர் இ) உதவியாள் ஈ) ஆசிரியர்
Answers
Answered by
5
Answer:
what is.
follow me please
Answered by
4
ஆசிரியர்
ஆக்கப்பெயர்
- நம்முடைய பயன்பாட்டிற்காக காலச் சூழலுக்கு ஏற்ப பல புதிய சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம்.
- அந்த சொற்கள் காரணப் பெயராக அல்லது இடுகுறி பெயராக இருக்கலாம்.
- இவ்வாறு புதியதாக ஆக்கப்படும் சொல் ஆக்கப்பெயர் என அழைக்கப்படுகிறது.
- ஆக்கப் பெயர் என்பது பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் ஆகும்.
ஆக்கப்பெயர் விகுதிகள்
- பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகள் ஆக்கப்பெயர் விகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
- காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம் முதலியன தமிழில் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகள் ஆகும்.
- (எ.கா) காவலாளி (ஆளி), மேலாளர் (ஆளர்), உதவியாளர் (ஆளர்).
- எனவே ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல் ஆசிரியர் ஆகும்.
Similar questions
Biology,
4 months ago
Accountancy,
4 months ago
Hindi,
8 months ago
Math,
8 months ago
Math,
11 months ago