பெருங்காடு, உழுதுழுது - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ
Answered by
18
பெருங்காடு
- பெருங்காடு என்ற சொல்லை பிரித்தால் பெருமை + காடு என வரும்.
- ஈறுபோதல் (ஈற்று எழுத்து கெட்டுப் போதல்) என்ற விதியின் அடிப்படையில் பெருமை என்ற சொல்லில் உள்ள மை என்ற ஈற்று எழுத்து நீங்கி பெரு + காடு என புணரும்.
- இனமிகல் என்ற விதியின் அடிப்படையில் கா என்ற சொல்லிற்கு இணையான மெல்லின மெய்யான ங் சேர்ந்து பெருங் + காடு = பெருங்காடு என புணர்ந்தது.
உழுதுழுது
- உழுதுழுது என்ற சொல்லை பிரித்தால் உழுது + உழுது என வரும்.
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதியின் அடிப்படையில் நிலைமொழியின் இறுதியில் உள்ள து என்ற எழுத்தில் உள்ள உகரம் நீங்கி உழுத் + உழுது என புணரும்.
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின் அடிப்படையில் (த் + உ = து) உழுதுழுது என புணர்ந்தது.
Similar questions