சிந்தனைப் பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
யார்க்குள கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று றையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை படரும் தொடை நயங உனைப்போல் யார்க்க நயங
Answered by
3
சிந்தனைப் பட்டிமன்றம்
- இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
எழில் - வீடே
- இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முதல்படியாக விளங்குவது, பிறந்த குழந்தைக்கு இந்த உலகினை பற்றி கற்று தருவது வீடுதான்.
- அன்பு, அறிவு என அனைத்தினையும் சிறுவயது முதலே சொல்லித் தருவது வீடே.
- எத்தனை உயரம் இமயமலை, அதில் இன்னொரு சிகரம் உனது தலை என வாழ்வின் நிலையினை உணர வைப்பது வீடு என எழில் கூறினான்.
அப்துல்லா - நாடே
- வீடு ஒரு சிறிய கூடு.
- வீட்டை தாண்டி நாட்டில் கால் பதித்தால் தான் நமக்கு நல்வாழ்வு ஆரம்பமாகிறது.
- அறிவியல் தொழில்நுட்பங்கள், கல்வி முதலியனவற்றை தந்து நாடே.
- பாரதி வீட்டை விட்டு வெளியே வந்து நாட்டை பார்த்த பிறகே கவிஞரானார்.
எலிசபெத் - வீடே
- வீடு சிறிய கூடு அன்று.
- அது நம் பாரம்பரியம், பண்பாடு, மரபினை காத்து நிற்கும் கருவூலம் ஆகும்.
- வீட்டில் கேட்ட தாலாட்டு, பெற்றோரின் வாழ்க்கை, பனையோலைக் காற்றாடி செய்யப் பழகியது, நிலாச்சோறு உண்டது என பலவற்றை எடுத்துக்காட்டாக எலிசபெத் கூறினாள்.
அமுதா - நாடே
- தங்கத்தினால் செய்யப்பட்ட கூட்டில் இருந்தாலும் கிளி அடிமைதான்.
- அவ்வாறு தான் பெண்களுக்கும் வீடு.
- இன்று பெண்கள் விஞ்ஞானியாக, கல்வியாளராக, கவிஞராக பல துறைகளில் சாதிக்க நாடே காரணம் என அமுதா கூறினாள்.
தீர்ப்பு
- இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது நாடுதான் என தீர்ப்பு வழங்கினார்.
Similar questions