நின் புண்ணியம் அனைத்தும் உதவுக - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answers
Answered by
2
நின் புண்ணியம் அனைத்தும் உதவுக
இடம்
- வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லி பாரதத்தில் கன்னிடம் (கர்ணன்) கண்ணன் கூறுவதாக அமைந்த வரிகளே நின் புண்ணியம் அனைத்தும் உதவுக என்பது ஆகும்.
பொருள்
- உன்னுடைய அனைத்து புண்ணியங்களையும் எனக்கு அளித்து உதவுங்கள்.
விளக்கம்
- பாரத போரில் அருசுனனின் வில்லுக்கு இரையான கன்னனின்(கர்ணன்) உயிரை அவன் செய்த தர்மம் காத்தது.
- இதனை அறிந்த கண்ணன் வேதியர் வடிவில் கன்னனிடம் சென்று, மேருமலையில் தவம் இருந்த நான் பெரிதும் துன்பமுற்றேன்.
- நீ வறியவருக்கு உதவுவாய் என்பதை கேள்வியுற்று உன்னை காண வந்தேன் என்றார்.
- கன்னன் கண்ணனிடம் என்னால் தற்போது உங்களுக்கு என்னக் கொடுக்க முடியுமோ அதை கேளுங்கள் என்றான்.
- அதற்கு கண்ணன் உன்னுடைய அனைத்து புண்ணியங்களையும் எனக்கு அளித்து உதவுங்கள் என்றார்.
Similar questions