இன்குலாப் , உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் எனக்கூறுவதன் நயத்தை விளக்குக.
Answers
Answered by
3
Explanation:
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
Please mark my answer as Branliest
Answered by
3
இன்குலாப் , உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் எனக்கூறுவதன் நயம்
இன்குலாப்
- கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு முதலியனவற்றில் சிறந்து விளங்கிய இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது என்பது ஆகும்.
- இன்குலாப்பின் கவிதைகள் ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டன.
நயம்
- கைகள் நீளும் போது அங்கே தோழமை தொடர வாய்ப்பு உள்ளது.
- ஆனால் நீளாத கைகளிலும் நெஞ்சத்தினை படரவிட வேண்டும்.
- இந்த உலகம் ஆனது ஒரு பெருங்கடலைப் போன்றது.
- இந்த உலகம் முழுமையாக எனக்கு தேவைப்படுகிறது.
- இந்த உலகம் என்னும் பெருங்கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாக உள்ளேன்.
- இன்குலாப் மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன் என்பதை நயம்படக் கூறுகிறார்.
Similar questions
English,
4 months ago
Biology,
4 months ago
Physics,
4 months ago
Accountancy,
8 months ago
Business Studies,
8 months ago
English,
11 months ago
English,
11 months ago
Geography,
11 months ago