வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
Answers
Answered by
7
வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன
- நமக்கு உணவினை வழங்கும் வயலுக்கு உதவுவதாக சிறு வாய்க்கால் உள்ளது.
- வாய்க்கால்கள் கடலை மலையாகவும், மலையை அலை கடலாகவும் மாற்றிட நடக்கிறது.
- இவை கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண்ணிய துகள்களாக மாற்றி சிறு மணலாக்குகின்றன.
- மேலும் தன்னால் இயன்ற புல், புழுக்களை கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு தருகிறது.
- மலையில் பொழிந்த மழையான பிறகு, அருவியாய் இறங்கி, குகைகளுள் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட பாடுகளைக் கூறி மேலும் தன்னால் இயன்றதை கொண்டு வருவதாக உறுதி தருகிறது.
- மனோன்மணீயம் நாடகக் நூலில் வரும் யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? என்ற வரிகள் வாய்க்காலின் பெருமையினை உணர்த்துகின்றன.
Similar questions
Biology,
4 months ago
Geography,
8 months ago
Math,
8 months ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago