நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
Answers
Answered by
0
Message to me ❤️♨️
Answered by
5
நடராசன் தனிமொழிகளிலிருந்து அறியும் கருத்துகள்
புல்லின் செயல்பாடு
- சிறுபுல்லும், பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரை காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேற்றிடம் செல்லும் வகையில் முள் துரட்டியைக் கொடுத்து, நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ இயலாது.
- எனவே வேறிடம் செல்க என அறிவுரைக் கூறுவதுபோல் செயல்படுவதாக நடராசன் சிந்திக்கின்றான்.
வாய்க்கால்
- வாய்க்கால்கள் கடலை மலையாகவும், மலையை அலை கடலாகவும் மாற்றிட நடக்கிறது.
- இவை கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண்ணிய துகள்களாக மாற்றி சிறு மணலாக்குகின்றன.
- மேலும் தன்னால் இயன்ற புல், புழுக்களை கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு தருகிறது.
- மலையில் பொழிந்த மழையான பிறகு, அருவியாய் இறங்கி, குகைகளுள் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட பாடுகளைக் கூறி மேலும் தன்னால் இயன்றதை கொண்டு வருவதாக உறுதி தருகிறது.
புழு
- ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள என்ற வரிகள் எத்தகைய மண்ணையும் நல்ல வளமான மண்ணாக மாற்றக்கூடிய நாங்கூழ்ப் புழுவின் செயல்பாட்டினை உணர்த்துகிறது.
நடராசனின் தனிமொழி
- நடராசனின் தனிமொழி ஆனது ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் உள்ளதை விளக்குகிறது.
- மேலும் வாழ்நாளில் யாரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதாக நடராசனின் தனிமொழி கூறுகிறது.
Similar questions
Math,
6 months ago
English,
1 year ago
Computer Science,
1 year ago
Hindi,
1 year ago
Math,
1 year ago