India Languages, asked by sahayalisa2, 9 months ago

பூவின்
ஏழு நிலைகள் யாவை?
ஆ​

Answers

Answered by Anonymous
26

ஒரு பூவானது நிஜத்தில் பல பரிணாமங்களை கொண்டது. ஆனால் நாம் அதை எளிதாக பூ அல்லது மலர் என சொல்லி விடுகிறோம்.

ஒரு பூவின் முதல் நிலை அரும்பு. அதாவது பூக்கும் செடி கொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு நிலையை அடையும். அரும்பின் மூன்று நிலைகள் நனை, முகை, மொக்குள் என்பவையாகும்.

அதை தொடர்ந்து இரண்டாம் நிலையான மொக்கு விடும் நிலை. இது அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.

அடுத்து மூன்றாம் நிலையான மொட்டு, முகிழ்க்கும் நிலையான முகை. இதையே நறுமுகையே என பல கவிகளும் பாடுகின்றனர்.

அதைத் தொடர்ந்து நான்காம் நிலையான,மலரும் நிலை.அதாவது மலர். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த, மிக எளிமையாய் காணக்கிடைக்கும் பூக்களின் நிலை. மேல் சொன்ன மூன்று நிலைகளும் பொதுவாக பூக்களை விரும்பி வளர்ப்பவர்களே பொதுவாக கண்டு அறிந்திருக்கும் பரிணாமங்கள். ஆனால் மலர் பருவம் எங்கும் பரவலாக கண்டதுமே நாம் அறியும் நிலை

ஐந்தாம் நிலையோ மிக அழகிய மலர்ந்த நிலை. இதன் பெயர் அலர்.

அல் + அர் = அலர் என்பதன் பொருள் விரிதல் ஆகும்.

அடுத்தது, வாடும் நிலையான வீ.இது ஆறாம் நிலை.வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். . இதற்கு வீழுகின்ற அல்லது வீழ்ந்த மலர் என்றுப் பொருள்.

இறுதியாக வதங்கும் நிலையான செம்மல். இது ஒரு வாடிய பூவின் இறுதியான பரிணாமம்.

இவைகளே ஒரு பூவின் முறையான, அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற ஏழுவகை பருவங்கள் (stage).

Answered by ZareenaTabassum
0

விடை:

தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.

  • சான்றாக, தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் அனைத்து நிலைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.

தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவில் ஏழு படி நிலைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

1.அரும்பு - அரும்பும் அல்லது தோன்றும் நிலை.

2.மொட்டு - மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை.

3.முகை - நறுமணத்துடன் மொட்டானது தனது இதழ்களைச் சிறிய அளவில் விரித்திருக்கும் நிலை.

4.மலர் - பூவானது தனக்கென உரிய முழு நறுமணத்துடன் நறுமுகையில் இருந்து முழுவதுமாகத் தனது இதழ்களை விரித்திருக்கும் நிலை.

5.அலர் - இந்நிலை தான் பூவின் முழுமையான நிலை. இந்நிலையில் மலரானது தனது இதழ்களை முற்றிலுமாக விரித்துப் பூவின் மற்ற நிலைகளைக் காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும்.

6.வீ - பூவானது வாடத் தொடங்கும் நிலை.

7.செம்மல் - பூவானது முற்றிலுமாக வாடிச் சருகாகி உதிரும் நிலை.

  • இவைகளே ஒரு பூவின் முறையான, அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற ஏழுவகை பருவங்கள்.
  • ஒரு பூவானது நிஜத்தில் பல பரிணாமங்களை கொண்டது. ஆனால் நாம் அதை எளிதாக பூ அல்லது மலர் என சொல்லி விடுகிறோம்.

SPJ3

Similar questions