India Languages, asked by samruthaasaravanan, 8 months ago

வாழைநார் வகைகள் இரண்டு வகைகள்

Answers

Answered by ashauthiras
5

Answer:

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் உள்ளன. இந்தியாவில் பரவலாக பயிரிடபடுவது 30 வகையாகும். வாழையின் வகைகள் அனைத்தும் அளவிலும், ருசியிலும் ஊட்டச்சத்திலும் மிக உயர்ந்தது.

1. பூவன் பழம் 2. ரஸ்தாளி பழம் 3. மலை வாழை பழம் 4. நேந்திரம் பழம் 5. கற்பூரவள்ளி பழம் 6. செவ்வாழை பழம் 7. ஏலக்கி பழம் 8. பேயன் பழம் 9. மட்டி வாழை 10. மொந்தம் வாழைப்பழம்

பூவன் பழம்:

அளவில் சிறியது ஒரு வாழை குலையில்100 முதல் 150 பழங்கள் இருக்கும். மூலநோய்களுக்கு உகந்தது.

ரஸ்தாளி பழம் :

ருசி குறைவு என்றாலும் பலன்களை கொண்டு தயாரிக்கும் இனிப்பு வகை மற்றும் சாலட்களில் பயன்படுத்தபடுகிறது

வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.

சத்துக்கள்

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.

செவ்வாழை பழம்

வாழை பழங்களில் அதிக சாது உடைய பழம் செவ்வாழை பழம் ஆகும் . இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.செவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும் ரஸ்தாளி

பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

Similar questions