இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம் இ) தொல்காப்பியம் ஈ) நன்னூல்
Answers
Answered by
3
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் அழகியலை உருவாக்குவதற்குத் தேவையான தளத்தினை அமைத்துத் தருகின்றது.
- இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- தொல்காப்பியத்தில் எழுத்துக்கள் பற்றிப் பேசும்போதே, செய்யுளின் வழக்கு பேசப்பட்டு விடுகிறது.
- தொல்காப்பியம் எழுத்து மற்றும் சொல்லை போலவே செய்யுளையும் ஒரு உள்ளமைப்பாகவே கருதுகின்றது.
- இதுவே மற்ற கலைகளிலிருந்து கவிதைக் கலையினை வேறுபடுத்துகின்ற முதன்மையான மற்றும் தனிச்சிறப்பான பண்பு ஆகும்.
- கிரேக்கம், வடமொழி போன்ற பிற மொழிகளைவிட, தமிழ் இதனைத் திட்டவட்டமாகப் புரிந்து வைத்து உள்ளது.
- சொல் வளம் என்பது சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு ஆகும்.
- இதனை தொல்காப்பிய எச்சவியல் ஆனது தொகைநிலை என்று கூறுகிறது.
Similar questions