மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!” – இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை
Answers
Answered by
6
அடி எதுகை, சீர் மோனை
தண்டியலங்காரம்
- அணி இலக்கணத்தினை கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று தண்டியலங்காரம் ஆகும்.
- காவியதர்சம் என்ற வடமொழி இலக்கண நூலினைத் தழுவி தமிழில் தண்டி என்பவரால் எழுதப்பட்ட நூலே தண்டி அலங்காரம் ஆகும்.
- இது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையதாக உள்ளது.
தொடை நயம்
- மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்.
அடி எதுகை
- செய்யுளின் அடிகளின் இரண்டாம் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவதற்கு அடி எதுகை என்று பெயர்.
- (எ.கா) மின்னேர் - தன்னேர் ஆகும்.
சீர் மோனை
- செய்யுளில் சீர்களின் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவது சீர் மோனை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) தன்னேர் - தமிழ் ஆகும்.
Similar questions