நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
Answers
Answered by
37
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்து
- பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில், ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் மிக முக்கியமானவை ஆகும்.
- நடைபெற்றியலும் என்றும் நடைநவின்றொழுகும் என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டு உள்ளது.
- மேலும் ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலி என்றும் சொல்கிறது.
- தொல்காப்பியத்தில் நடை என்ற சொல் ஆனது தெளிவான பார்வையோடு இடம் பெற்று உள்ளது.
- கவிதையின் உந்துசக்தியாக மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் உள்ளன.
- மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமையுடைய ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்துகிறது.
- கவிதையின் இயங்கு ஆற்றலாக நடை உள்ளதாகவே தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் கருதுகின்றன.
Answered by
30
Answer:
நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.
Explanation:
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Chemistry,
8 months ago
Social Sciences,
11 months ago
Science,
11 months ago