சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் –விளக்குக
Answers
Answered by
45
சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பு
ஒலிக்கோலங்கள்
- சமிக்ஞை மற்றும் இசையில் இருந்து தான் எந்த ஒரு தொன்மையான மொழியும் தொடங்குகிறது.
- இசை மற்றும் இசைக் கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை ஆனது பிறக்கிறது.
- ஓசையும் பொருளும் சேர்ந்து கலை வடிவம் கொள்கின்றன.
(எ.கா)
- கடந்தடு தானை மூவிருங் கூடி உடன்றனிர்ஆயினும் பறம்பு கொளற்கரிதே
- மேலே உள்ள வரிகளில் க, த, ட, ற என்ற வல்லின மெய்களில் உணர்ச்சியின் ஒலிக்கோலம் காணப்படுகிறது.
- படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக
- சொற்களின் இடையில் அமைந்துள்ள உயிர் நெடில் எழுத்துக்கள், செய்யுளில் ஓசை நயத்தினை ஏற்படுத்த நீண்டு ஒலிக்கின்றன.
- இவ்வாறு சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் அமைந்து உள்ளது.
Similar questions