"பின்வரும் இரு பாக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக. அ) பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே (நன்னூல்) ஆ) மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வாவா (சிற்பி பாலசுப்பிரமணியம்) "
Answers
Answered by
2
Answer:
ஆ) மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வாவா
Answered by
3
நன்னூல்
- பழையனவாக மாறிவிட்ட சில நடைமுறைகளை பயன்பாட்டில் இருந்து நீக்குவதும், புதியனவாக மாறிவிட்ட சில நடைமுறைகளை பயன்பாட்டில் சேர்ப்பதும் குற்றம் ஆகாது.
- காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை ஏற்றுக் கொள்வது கட்டாயமாக உள்ளது.
சிற்பி பாலசுப்பிரமணியம்
- மீண்டும் அந்த பழமை நலத்தினை புகுக்குதற்கு, உடல் சிலிர்த்து எழுமாறு தமிழ்க்குயில் கூவி வர வேண்டும்.
விளக்கம்
- நன்னூல் வரிகள் பழைமை நீக்கவும், சிற்பி பாலசுப்பிரமணியத்தின் வரிகள் மீண்டும் பழைமையை சேர்க்கவும் சொல்கிறது.
- பழைமையான அனைத்தும் தேவையற்றவை ஆகாது.
- பழைமையிலும் தற்காலத்திற்கு நன்மை பயக்கும் பல செய்திகள் இருக்கலாம்.
- எனவே பழைமையில் குறையிருந்தால் மட்டும், அவற்றினை நீக்கலாம்.
- இல்லையேல் நன்மைப் பயக்கும் பழைமையினை மீண்டும் கொண்டு வரலாம்.
Similar questions