ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answers
Answered by
50
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்
இடம்
- காவியதர்சம் என்ற வடமொழி இலக்கண நூலினைத் தழுவி தமிழில் தண்டி என்பவரால் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் என்ற வரிகள் இடம் பெற்று உள்ளன.
பொருள்
- ஒலிக்கும் அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் இருள் நீங்கும்.
- இந்த பாடல் வரிகள் ஆனது தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையினை கூறுகிறது.
விளக்கம்
- சூரியன் தன் கதிர்களால் ஒலிக்கும் அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் பரவி காணப்படுகின்ற புற இருளினைப் போக்கும் தன்மையினை உடையதாக உள்ளது.
- அது போலவே தமிழ் மொழியும் மக்களின் அக இருளைப் போக்கி, அறியாமையினை அகற்றும் சிறப்பு உடையதாக உள்ளது.
Similar questions