யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _____ அ) அஃறிணை, உயர்திணை ஆ) உயர்திணை, அஃறிணை இ) விரவுத்திணை, அஃறிணை ஈ) விரவுத்திணை, உயர்திணை
Answers
Answered by
3
உயர்திணை, அஃறிணை
திணைப் பாகுபாடு
- உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பெயர்ச் சொற்களே அதிகமாக உள்ளன.
- திணை அடிப்படையில் பெயர்ச் சொற்களை உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என இரு வகைப்படுத்தலாம்.
- தமிழில் பொருட்குறிப்பினை அடிப்படையாக கொண்டு திணைப் பாகுபாடு நடைபெறுகிறது.
- மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை.
- அவரல்லாத பிற அஃறிணை என தொல்காப்பியம் கூறுகிறது.
- இந்த பாகுபாடு ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை.
- யார்? எது? முதலிய வினாச் சொற்களை பயனிலையாக கொண்டு திணை வேறுபாடு அறியப்படுகிறது.
- அங்கே நடப்பது யார்? அங்கே நடப்பது எது? என்ற தொடர்கள் பொருட்குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை உயர்திணையையும், எது என்ற பயனிலை அஃறிணையையும் குறிக்கிறது.
Similar questions