பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர் இ) இடைச்சொல் தொடர் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answers
Answered by
1
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - ஈறு + கெட்ட + எதிர்மறை + பெயரெச்சம்.
- எதிர்மறையான பொருளில் வருகின்ற வினைச் சொல் ஒன்று, அதன் ஈற்று எழுத்து (கடைசி எழுத்து) இல்லாமல் வந்து, அடுத்து வரும் பெயர்ச் சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென என்ற தொடரில் உள்ள பொய்யா என்ற சொல்லானது பொய்யாதது என்ற முடிவினை பெறாமலும், பொய்யாத என்ற சொல்லில் உள்ள த என்ற ஈற்றெழுத்து இல்லாமலும் வந்து வானம் என்ற பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமைவதால் பொய்யா என்ற சொல் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என அழைக்கப்படுகிறது.
Similar questions
India Languages,
4 months ago
English,
4 months ago
Science,
4 months ago
English,
8 months ago
Biology,
8 months ago
Political Science,
11 months ago
Physics,
11 months ago
Biology,
11 months ago